அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை
 

பயிற்சி விஜயமொன்றினை மேற்கொண்டு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான “என்கரேஜ்” எனும் கப்பல் இன்று (ஆகஸ்ட், 24) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பலை இலங்கை கடற்படையினர், கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்றனர்.

“என்கரேஜ்” கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் டெனிஸ் ஜேகோ உட்பட அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களை சந்தித்தார்கள். அங்கு இரு நாடு கடற்படை பயிற்சிகள் தொடர்பாக சில முக்கிய விஷயங்கள் பற்றி உரையாடினார்.மேலும் இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

மேலும் கப்பலின் கட்டளை அதிகாரி உட்பட அதிகாரிகள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க,  கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன ஆகியோர் உட்பட மூத்த அதிகாரிளுடைய பங்கேற்பின் கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் தளபதி அரங்கத்தில் உரையாடினார்கள்.

நாங்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த இக் கப்பலின் குழுவினர் இலங்கை கடற்படை மரையின் பிரிவுடன் பயிற்சிகள் நடத்தவும் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சௌள மற்றும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் திட்டங்களில் கழந்துகொள்வார்கள்.

208.5 மீட்டர் நீளம் மற்றும் 32 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 25000 கொள்ளவு கொன்டுள்ளது. மேலும் 600 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ள இக் கப்பல்  எதிர் வரும் ஆகஸ்ட்,28 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.