பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன்’ கப்பலுக்கு விஜயம்
 

பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன அவர்கள் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரனசிங்க அவர்கள் நேற்று (ஆகஸ்ட் 22) ஐக்கிய அமெரிக்காவின் பெறப்பட உள்ள  அமெரிக்க கடலோர காவல்படையின் ‘ஷர்மன் (USCGC Sherman) கப்பலுக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர்.

அதன் பிரகாசமாக பாதுகாப்பு செயலாளர் ஹவாய் தீவில் ஹோனொலுலுக்கு சென்று பயிற்சி ஒத்திகையில் ஈடுபடும் ஷர்மன் கப்பலில் கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்க உள்ள கேப்டன்  அருன தென்னகோன் உட்பட இலங்கை கடற்படையின் வீரர்கள் குழுவின் செயற்பாடுகளை கண்டறிந்து அவர்களை பாராட்டினார்.

மேலும் ஹவாய் தீவுக்கு வருகிற சூறாவளி நிலைமை இருந்தபோதிலும் கப்பலில் விஜயமொன்று மேற்கொன்டுள்ள பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க கடலோரக் காவல்படை அதிகாரிகள் சந்தித்து குறித்த கப்பல் இலங்கைக்கு பெறும் நடவடிக்கைகள் பற்றி மற்றும் இரு நாடுகளில் இடையில் ஒத்துழைப்பு வளர்ச்சி பற்றிய காரனங்கள் உறையாடபட்டது.

இன் நிகழ்வுக்காக ஹவாயில் இலங்கை பிரதிநிதி திரு தம்மிக குரே (Dhammika Cooray) அவர்களும் கழந்துகொன்டார். சூறாவளி புயல்கள் அதிகரித்த காரணமாக ‘ஷர்மன் கப்பல் அதிகாரபூர்வமாக இலங்கை கடற்படைக்கு ஒப்படைப்பு தாமதம் என்றாலும் ஆகஸ்ட் இறுதியில் இலங்கை கடற்படைக்கு ஒப்படைக்க உள்ளது. மேலும் குறித்த கப்பல் 2019 ஏப்ரல் மாதம் இலங்கைக்கு வந்தடைய உள்ளது.