பாக்கிஸ்தான் கடற்படையின் “டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பல் கொழும்பு துறைமுகத்துக்கு வருகை.
நல்லெண்ண விஜயமொன்றை மேற்கொண்டு பாக்கிஸ்தான் கடற்படையின் ‘டெசிக் பி.எம்.எஸ்.எஸ் காஷ்மீர் ' கப்பல் இன்றையதினம் (ஆகஸ்ட் 13) கொழும்பு துறைமுகத்துக்கு வருகைதந்துள்ளது. வந்தடைந்த இக்கப்பளுக்கு, இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டன.
கப்பல் துறைமுகத்தை வந்தடைந்த பின் கப்பலின் கட்டளை அதிகாரியான கேப்டன் அஷார் முஹமது உட்பட குழுவினர் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து சந்தித்தனர். இன் நிகழ்வு நினைவு கூறி நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இன் நிகழ்வுக்காக இலங்கையின் பாக்கிஸ்தான் உயர் ஆணையத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சஜாட் அலி அவர்களும் கழந்துகொன்டார்.
நாங்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொன்டு இலங்கைக்கு வருகைதந்த இக் கப்பலின் குழுவினர் இலங்கையில் முக்கியமான தளங்களுக்கு சௌள மற்றும் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்யும் நட்பு கைப்பந்து போட்டியிலும் கழந்துகொள்வார்கள்.
95 மீட்டர் நீளம் மற்றும் 12.2 மீட்டர் அகலத்தைக் கொண்ட இக்கப்பல், 74 கடற்படை வீரர்கள் பயணம் செய்யும் வசதிகளையும் கொண்டுள்ளது. மேலும், எதிர் வரும் ஆகஸ்ட்,16 ஆம் திகதி நாட்டை விட்டு புறப்படவுள்ளது.