கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சி (JCET) வெற்றிகரமாக நிறைவு
 

இலங்கை கடற்படை, சிறப்பு படகு படையனி மூலம் ஏற்பாடுசெய்யப்பட்ட கூட்டு பயிற்சி பரிமாற்று நிகழ்ச்சியின் (JCET) சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 10) திருகோணமலை அட்மிரல் வசந்த கரன்னாகொட அவைக்களத்தில் இடம்பெற்றது.

இலங்கை கடற்படை சிறப்பு படகு படையனியின் 36 பேர்,  4 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் 26 பேர் மற்றும் அமெரிக்க கடற்படை சிறப்பு படைத் பிரிவின் வீரர்கள் இனைந்து கடந்த ஜுலை 17 திகதி தொடங்கிய இந்த பாடத்திட்டம் 04 வாரங்களாக இடம்பெற்றது. இந்த பயிற்சி ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றதுடன் இப் பயிற்சி மூலம் கடற்படையினர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு தேவைகள் பற்றி நல்லிணக்கம், புரிதல் மற்றும் ஒப்பந்தம் பெற முடிகின்றது. இங்கு பயிற்சி வெற்றிகரமாக முடிவுசெய்த அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த சிறப்பு நிகழ்வை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.

இந்த சான்றிதழ் வழங்கும் விழாவுக்காக கடற்படை கொடி கட்டளையின் கொடி அதிகாரி கொமடோர் ஆனந்த குறுகே, கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி கொமடோர் நன்தன ஜயரத்ன, 04 வது விரைவு தாக்குதல் படகுகள் குழுவின் கட்டளை அதிகாரி கேப்டன் டேமியன் பிரனாந்து, சிறப்பு படகு படையனி தலைமையகத்தில் கட்டளை அதிகாரி, கேப்டன் அருன வீரசிங்க ஆகியோர் உட்பட கிழக்கு கடற்படை கட்டளையின் அதிகாரிகள் மற்றும் விர்ர்கள் கழந்துகொன்டனர்.