மேற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இரத்ததானம்
 

இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் ஒன்று இன்றய தினம் (ஆகஸ்ட் 07) கொழும்பு கடற்படை பொது வைத்தியசாலையில் இடம்பெற்றது.

கடற்படையினரின் கூட்டு சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சித்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இதன் மூலம் றாகம போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் பங்குகள் பூரணமாக்கப்பட்டன. கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க மற்றும் மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இடம்பெற்ற இந்த வேலைத்திட்டத்தில், மேற்கு பிராந்திய கடற்படைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கப்பல்கள் மற்றும் கரையோர நிறுவனங்களுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் பலர் கலந்து கொண்டனர்.

றாகம போதனா வைத்தியசாலையில் இரத்தம் தேவைப்படும் நோயாளிகளின் உயிர்களை காப்பாற்றும் நாக்கத்தின் ஏற்பாடுசெய்யப்பட்ட குறித்த நிகழ்வுக்காக றாகம போதனா வைத்தியசாலையில் இரத்த வங்கியின் ஊழியர்களும் நிறைய உதவி வழங்கினர்.