சட்டவிரோதமாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 21 நபர்கள் கடற்படையால் கைது
 

இலங்கை கடல் பகுதியில் நடக்கும் சட்டவிரோத நடவடிக்கைகள் (Transnational Crime) தடுக்கும் நோக்கத்துடன் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை மேற்கு கடற்படை கட்டளையின் துரித தாக்குதல் படகில் இனைக்கப்பட்ட கடற்படையினரினால் இலங்கைக்கு சொந்தமான தனிப்பட்ட பொருளாதார மண்டலத்துக்குல் (EEZ) நேற்று (ஜூன் 05) மேற்கொன்டுள்ள ரோந்து நடவடிக்கையின் போது மேற்கு கடலில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்றுடன் 21 நபர் கைது செய்யப்பட்டது.

சிலாபத்தில் இருந்து 117 கடல் மைல்கள் தூரத்தில் சந்தேகத்திற்கிடமான முரையில் சென்ற படகொன்று கடற்படையினரினால் கன்கானிக்கப்பட்டதுடன் குறித்த படகுக்கு கடற்படையின் இரன்டு துரித தாக்குதல் படகுகள் அனுப்பிவைக்கப்பட்டது. பின்னர் சட்டவிரோதமாக கடல் வலியாக குடிபெயர்வதற்கு முயற்சி செய்த 21 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டது. அங்கு 19 ஆன்கள் மற்றும் 02 பென்கள் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது.  

அதன் பின் குறித்த நபர்கள் கொழும்பு துறைமுகத்துக்கு கொன்டுவந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகம்  காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மூலம் நிரந்தரமாக மேற்கொள்ளப்படுகின்ற ரோந்து நடவடிக்கைகளினால் சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகள் உட்பட, பல சட்டவிரோதமான இடம்பெயர்வுகள் வெற்றிகரமாக தடுக்கப்படுகின்றது.