கடற்படை தளபதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
 

கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமெவன் ரணசிங்க அவர்கள் கடந்த ஆகஸ்ட 01 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொன்டுள்ளார். அங்கு கடற்படை தளபதி அவர்களை தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா அவர்களினால் உற்சாகமாக வரவேற்கப்பட்டது.

கடற்படை தளபதியவர்கள் முதலில் கட்டளை சபை மண்டபத்தில் வைத்து தென்கிழக்கு கடற்படை கட்டளையின் அனைத்து துறை பிரதானிகளுடன் உரையாடினார். அதன் பிரகு தென்கிழக்கு கடற்படை கட்டளை அதிகாரி இல்லத்தின் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கட்டிடமொன்றும் திறந்து வைத்தார். மேலும் குறித்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளில் ஈடுபட்ட கடற்படையினர்களை பாராட்டின அவர் இச் சந்தர்ப்பத்தை நினைவு கொள்ளும் வகையில் மாம் மரக்கன்னு ஒன்றும் நாட்டினார். அதன் பிரகு இவர் இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தில் கண்கானிப்பு விஜயமொன்றும் மேற்கொன்டுள்ளார்.

அதே போன்ற இலங்கை கடற்படை கப்பல் மஹாநாக நிருவனத்தினால் ராடார் மையமாக பராமரிக்கப்படுகின்ற கல்முனை கடற்படை பிரவுக்கும் விஜயமொன்று மேற்கொன்ட கடற்படை தளபதியவர்கள் அங்கு கல்முனை கடற்படை பிரவு கடற்படை நிலைப்படுத்தல் கல்முனையாக பெயரலித்தார். அதன் பின் அங்கு கன்கானிப்பு விஜயமொன்று மேற்கொன்ட இவர் அங்கு அதிகாரிகள் மற்றும் வீர்ர்களுடன் உறையாடினார்.