சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கைதுசெய்ய கடற்படையின் ஆதரவு
கடந்த தினங்களில் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 54 பேர் கடற்படையினரினால் கைது செய்யப்பட்டது. இவர்கள் சட்டவிரோதமான மீன்பிடி, அனுமதி இல்லாமல் மீன்பிடி மற்றும் போதை பொருற்கள் விற்பனை ஆகிய காரனங்களினால் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது.
அதன் பிரகாரமாக வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஜுலை 23 ஆம் திகதி வெடிதலதீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான கடல் அட்டைகளுடன் 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 361 கடல் அட்டைகள் மற்றும் 04 வல்லங்கள், கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் கடல் அட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெடிதலதீவு மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 25 ஆம் திகதி வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களினால் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் மீன்பிடி அனுமதி பத்திரைகள் இல்லாமல் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள், டிங்கி படகு மற்றும் மீன்பிடி பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஜுலை 25 ஆம் திகதி இரனமாதாநகர் மற்றும் யஹாப்பார் கடற்கரை பகுதியில் வைத்து சட்டவிரோதமான கடல் அட்டைகளுடன் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 53 கடல் அட்டைகள் மற்றும் 03 டிங்கி படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் கடல் அட்டைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கிளிநொச்சி மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜுலை 26 ஆம் திகதி யானைதீவு மற்றும் முல்லைதீவு கடல் பகுதியில் வைத்து சட்டவிரோதமான மீன்பிடியில் ஈடுபட்ட 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து பிடிக்கப்பட்ட 451 கிலோகிராம் மீன்கள், 06 டிங்கி படகு, சட்டவிரோதமான 12 வலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. யானைதீவு பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், மீன்கள், வலைகள் மற்றும் டிங்கி படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடலோர பாதுகாப்பு துறை மூலம் திருகோணமலை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரினால் கடந்த ஜூலை 26 ஆம் திகதி மட்டக்களப்பு குளம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கைகளின் போது கட்டவிரோதமான வலைகள் 20 கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த வலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மட்டக்களப்பு துனை மீன் வள இயக்குனரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 28 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் குச்சவேலி பொலிஸார் இனைந்து கோபால்புரம் பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக வெட்டி மறைக்கப்பட்ட 12 குதிரமோடு பலஹைகள் கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த குதிரமோடு பலஹைகள் குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதன் பிரகாரமாக அதே தினம் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் இனைந்து கொட்டே மீன்பிடி துரைமுகத்தில் முன் நுழைவாயிலுக்கு அருகில் வைத்து 60 சட்டவிரோத வெளிநாட்டு சிகரெட் பெட்டிகள் விற்பனை செய்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த சிகரெட் பெட்டிகள் முச்சக்கர வன்டி மூலம் கொண்டுசெல்லும்போது கைது செய்யப்பட்டது. குறித்த சிகரெட் பெட்டிகள் மற்றும் சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைக்காக சீன துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் வட மத்திய கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் கடந்த ஜுலை 28 ஆம் திகதி மெதவச்சி நகரதடதில் சட்டவிரோதமான போதை மாத்திரைகள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவர்களிடமிருந்து 1460 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள், மற்றும் மாத்திரைகள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அனுராதபுரம் உணவு மற்றும் மருந்து பரிசோதனை அலுவலகத்துக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.