சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது
 

கிழக்கு கடற்படை கட்டளையில் கடலோர காவல் படகுகளுக்கு இனைக்கப்பட்ட கடற்படையினரினால் கடந்த 14 ஆம் திகதி மேற்கொன்டுள்ள ரோந்து பணிகளில் போது சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13பேர் கைது செய்யப்பட்டது.

அதன் பிரகாரமாக திருகோனமலை பிலேக் ஸடாப் பகுதிக்கு தென் கிழக்கு மற்றும் வடக்கு கடல் பகுதியில் சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கயில் ஈடுபட்ட 13 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், மீன்பிடிக்க பயன்படுத்திய சுமார் 225 மீட்டர் நீளம்கொன்ட சட்டவிரோத 02 வலைகள், 02 ஜோடி நிர் முழ்கி காலனிகள், 02 நிர் முழ்கி முகமூடிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர்கள் மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை கடற்றொழில் உதவிப் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அத்தகைய சட்டவிரோத மீன்பிடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்கும் நடவடிக்கள் அடக்குவதற்காக கடற்படை தொடர்ச்சியாக நடவடிக்கைகள் மேற்கொன்டு வருகிறது, இதுக்காக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை மற்றும் இலங்கை கடலோர பாதுகாப்புத் திணைக்களமும் செயற்பட்டு வருகின்றன.