வெற்றிகரமாக பயிற்சி நிறைவுசெய்த 75 கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வு திருகோணமலையில்
சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது (தொழில்நுட்ப) மற்றும் 32 வது ஆட்சேர்ப்பு, 57 வது கேடட் ஆட்சேர்ப்புகளுக்கு சொந்தமான 75 மிட்சிப்மென்கள் தமது அடிப்படை பயிற்சிகளை நிறைவு செய்து அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறும் நிகழ்வு கடந்த ஜூலை 14 ஆம் திகதி இடம்பெற்றது. திருகோணமலையில் அமைந்துள்ள இலங்கை கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் நடைபெற்ற கடற்படை அதிகாரிகளின் வெளியேறல் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரனசிங்க அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இந் நிகழ்வில் மரியாதைக்குரிய மகா சங்கதேரர்கள் உடபட அனைத்து மத குருமார்கள் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க, , கடற்படை தலைமையகத்தின் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், கடற்படை மற்றும் சமுத்திரவியல் அகடமியில் தளபதி கொமடோர் கலன ஜினதாஸ, அரச அதிகாரிகள், பயிற்சிகளை முடித்துக் கொண்டு வெளியேறும் இளம் அதிகாரிகளின் பெற்றோர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், பயிற்சியின் போது தமது திறன்களை வெளிக்காட்டிய கடற்படை பயிலுனர் அதிகளுக்கான விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன. அதனடிப்படையில் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது (தொழில்நுட்ப) ஆட்சேர்ப்பின் அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மிட்சிப்மென் எம்.எம்.சி.எம் மொரமுதலி இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும் 32 வது ஆட்சேர்ப்பின் மிட்சிப்மென் பி.ஏ.எஸ்.டி பெரேரா இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மிட்சிப்மென் டி.ஜி.டி.பி பூர்னிமல் இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மிட்சிப்மென் (பெண்) ஜி.யு.வை.ஆர் ஜயவர்தன தொழில்முறை பாடங்களில் அதிக புள்ளி பெற்ற அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த விளையாட்டு வீராங்கனியாக மிட்சிப்மென் (பெண்) எஸ்.ஏ.ஜி.கே சதரசிங்க பெற்றுள்ளார். இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த குறிவைப்பவருக்கான விரிது ஆர்.யு லியனகே பெற்றுள்ளார். இதே போன்ற 57 வது கெடட் ஆட்சேர்ப்பின் அனைத்து பயிற்சிநெறிகளிலும் அதி கூடிய புள்ளிகளைப் பெற்றுக் கொண்ட மிட்சிப்மென் வை.ஏ.டி.எஸ்.எஸ் யாபா இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டு வாள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மிட்சிப்மென் கே.ஜி.ஆர்.டி நாமல்கமுவ தொழில்முறை பாடங்களில் மற்றும் நீர் விழயாட்டுகளில் அதிக புள்ளி பெற்ற அதிகாரியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். சிறந்த விளையாட்டு வீர்ராக மிட்சிப்மென் என்.பி.டி த சில்வா பெற்றுள்ளார். இவ் ஆட்சேர்ப்பின் சிறந்த குறிவைப்பவருக்கான விரிது பி.எச்.எஸ.சி லக்ஷித பெற்றுள்ளார்.
இங்கு உரை நிகழ்த்திய கடற்படைத் தளபதி, இளம் அதிகாரிகளான நீங்கள், உங்கள் முன் உள்ள சவால்களை இம் மதிப்புமிக்க பயிற்சி நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொண்ட கடுமையான பயிற்சியினை நிரூபிக்கும் வகையில் விடாமுயற்சியுடன் எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்ததுடன் எதிர்கால தலைமுறையினருக்காக கடுமையாக போராடிப்பெற்ற சமாதானத்தை தக்கவைத்து கொள்வதற்கான அவசியத்தை வலியுறுத்திய அவர் அதுவே நாட்டு மக்கள் எனும் வகையில் நாம் எமது யுத்த வீரர்களுக்கு செலுத்தும் நன்றிக்கடன் ஆகும் எனவும் குறிப்பிட்டார். கடற்படை கலாச்சார குழுவினரால் வழங்கப்பட்ட ஒரு வண்ணமயமான கலாச்சார நிகழ்ச்சியின் மற்றும் கடற்படை இசை குழுவால் வழங்கிய நிகழ்ச்சியின் பின்னர் கடற்படை மரபுகளுக்கு இணயாக அதிகாரியளிக்கும் நிகழ்வு முடிந்தது. அதிகாரமளிக்கப்பட்டு வெளியேறிய 75 அதிகாரிகளின் சேர் ஜோன் கொத்தலாவெல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 31வது (தொழில்நுட்ப) ஆட்சேர்ப்பின் 26 அதிகாரிகள், 32 வது ஆட்சேர்ப்பின் 28 அதிகாரிகள் மற்றும், 57 வது கேடட் ஆட்சேர்ப்பின் 21 அதிகாரிகள் கழந்துகொன்டனர்.