எக்கல் ஒயாவில் காணாமல் போன நபர்களை தேடும் பணி இலங்கை கடற்படை சுழியோடிகளால் தொடர்ந்தும் முன்னெடுப்பு
அண்மையில் (ஜூலை, 08)அம்பாறை தமன எக்கல் ஒயாவில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளான விடயம் தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர், இலங்கை கடற்படை சுழியோடிகள் அங்கு விரைந்து செயற்பட்டு காணாமல் போன நபர்களை மீட்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிகழ்வு தொடர்பாக அறிவிக்கப்பட்ட பின்னர் மீட்பு பணிகளுக்காக ஆறு கடற்படை சுழியோடிகள் அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்விபத்தில் காணாமல் போன நான்கு பேரில் மூவரின் உடல்கள் கடற்படை சுழியோடிகளால் மீட்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்படுகிறது.கந்தான சிறி சீவலி வித்தியாலயத்திலிருந்து கல்விச் சுற்றுலா சென்ற 45 பேரில் 09 பேர் எக்கல்ஓயாவில் படகு ஓட்டி சென்ற வேளை எதிபாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்தில் சிக்கியுள்ளனர். இவர்களில் ஐவர் ஊர் மக்களால் காப்பற்றப்பட்ட அதேவேளை நால்வர் காணாமல் போயிருந்தனர்.
காணாமல் போன நான்கு பேரில் பாடசாலையின் அதிபர் (53), ஆசிரியர் (43) மற்றும் மாணவர் ஒருவர் (13) உள்ளிட்ட மூவரை இலங்கை கடற்படை சுழியோடிகளால் சடலமாக மீட்கப்பட்டதுடன், காவலரான (31) மற்றவை தேடும் பணியில் கடற்படை சுழியோடிகள் மேற்கொண்டுவருகின்றனர்.