கல்வி சுற்றுலாக்காக இலங்கைக்கு வருகைதந்த சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை
எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ (Michel Tedzani Moyo) தலைமையின் 26 மூத்த உயர் அதிகாரிகள் கொன்ட சிம்பாப்வே தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக அதிதிகள் குழு நேற்று (ஜுலை 03) கடற்படைத் தலைமையகத்தில் விஜயமொன்று மேற்கொன்டுள்ளனர். அப்பொலுது இக் குழுவின் பிரதானி எயர் வைஸ் மார்ஷல் மைக்கேல் டெட்ஸானி மோயோ அவர்கள் கடற்படை தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா சந்தித்து கலந்துரையாடினார். இந் நிகழ்வை நினைவு கூறும் வகையில் அவர்களுக்கிடையே நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன.
அதன் பிரகு வடக்கு மற்றும் கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகளில் போது இலங்கை கடற்படை எவ்வாறு செயற்பட்டது என்பதும் பயன்படுத்தப்பட்ட கலை நுட்பங்களை பற்றியும் அறிவு பரிமாற்றப்பட்டன. குறிப்பாக சிறிய படகுகள் எவ்வாரு மனிதாபிமான நடவடிக்கைக்கு பயன்படுத்தப்பட்டது என்பதும் மனிதாபிமான நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் வழங்கிய ஆதரவு பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
குறித்த கலநதுரையாடலுக்காக கடற்படையின் தலைமை பணியாளர் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, பணிப்பாளர் நாயகம் பயிற்சி ரியர் அட்மிரல் ரசிக திஸாநாயக்க, கடற்படை செயல்பாடுகளுக்கான இயக்குனர் கொமடோர் சந்ஜிவ டயஸ் ஆகியோர் உட்பட கடற்படைத் தலைமையகத்தில் மூத்த அதிகாரிகள் கழந்துகொன்டனர்.