உலக இரத்த தானம் தினத்திற்கு இனையாக வடக்கு கடற்படை கட்டளைக்கு பாரட்டு
 

கடந்த வாரம் உலக இரத்ததான தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில், இலங்கை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையாகத்தினால் சமூக நலன்புரி திட்டத்தின்கீழ் முன்னெடுக்கப்பட்ட இரத்த தான நிகழ்வுகள் பாராட்டுப் பெற்றுள்ளன. சுகாதார அமைச்சு, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ மற்றும் இலங்கை இரத்த வங்கி ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் தாமரை தடாக கேட்போர்கூடத்தில் கடந்த (ஜூன், 14) இடம்பெற்ற நிகழ்வின் போது பாரட்டப்பட்டுள்ளது.

யாழ் தீபகற்பத்தில் உள்ள மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்ட இரத்த தான முகாம் மற்றும் மருத்துவ சிகிச்சை முகாம்களை கடற்படையின் வடக்கு கடற்படை கட்டளையாகத்தினால் வழமையாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறான நிகழ்வின் மூலம் இப்பிராந்தியத்தில் உள்ள இரத்தம் தேவையுடைய 2000க்கும் அதிகமான நோயாளர்களுக்கு சுமார் 713 க்கும் அதிகாமான கடற்படை வீரர்கள் இரத்த தானம் செய்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் இவ்வாறான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.