கழிவு முகாமைத்துவத்திற்கு கடற்படையின் ஒத்துழைப்பு
 

இலங்கை கடற்படையினர் சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை ஆரம்பித்துள்ளனர். அவற்றில் ஒன்றாக பிளாஸ்டிக் பொருட்களை மீள் சுழற்சி செய்யும் ஒரு புதிய முறையினை அறிமுகப்படுத்தியுள்ளனர். இப்புதிய முறையினை கடற்படையின் கடல்சார் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி பிரிவினால் அறிமுகப்படுத்தப்பட்டதுடன், அண்மையில் கல்பிட்டியவின் அனவாசலயில் பிளாஸ்டிக் மீள் சுழற்சி மையம் திறந்து வைக்கப்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் உதவியுடன் சுற்றாடலை பாதுகாக்கும் வகையிலான முதலாவது இலாப நோக்கமற்ற ஒரு மீள் சுழற்சி மையம் நிறுவப்பட்டுள்ளது. இதன்மூலம் திண்மக் கழிவுகளுக்கு ஒரு நிலையான தீர்வை வழங்குவதோடு மட்டுமல்லாமல், அங்கு வசிப்போர் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்குவதன் மூலம் நியாயமான விலையை பெற்று தமக்கான மேலதிக வருமானத்தையும் பெற்றுக்கொள்ள வழிவகுக்கிறது.

இதேவேளை, உலக பசுபிக் தினத்தை முன்னிட்டு (ஜூன் 08) இலங்கை கடற்படையினர் நாடு முழுவதும் தொடர்ச்சியான கடற்கரை சுத்திகரிப்பு வேலைத் திட்டங்கள் முன்னெடுத்துள்ளனர். குறித்த சமூக நலத்திட்த்தினை ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளர்.

வார இறுதிநாட்களில் முன்னெடுக்கப்பட்ட (ஜூன், 09-10). குறித்த சமூக நல சேவைகள் கல்பிட்டி, காக்கை தீவு (கொழும்பு), ஹிக்கடுவ, காலி, மிரிஸ்ஸ, ஹம்பாந்தோட்டை, அருகம்பே, மட்டக்களப்பு, நிலாவெளி, பருத்தித்துறை, தலைமன்னார் மற்றும் நாகதீப ஆகிய கடலோரப் பகுதிகளில் காணப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகளும் சுத்திகரிக்கப்பட்டன.