தெற்கு கடற்பகுதியில் இரு மீனவர்கள் கடற்படையினரால் பாதுகாப்பாக மீட்பு
மீனவப்படகின் இயந்திரத் கோளாறு காரணமாக தெற்கு கடற்பகுதியில் தத்தளித்துக் கொண்டிருந்த இரண்டு மீனவர்களை இலங்கை கடற்படை குழுவினர் பாதுகாப்பாக மீட்டுள்ளனர். தங்கல்ல மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன், 08) மீன்பிடி நடவடிக்கைகளுக்காக சென்ற மீனவர்கள் இருவரே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
தமது மீன்பிடி நடவடிக்கையின்போது, படகில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக அம்பாந்தோட்டை கடற்பகுதிக்கு அப்பால் கடலில் தத்தளிக்க நேர்ந்துள்ளது. மேற்படி மீனவர் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தெக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கபில சமரவீர அவர்களின் அறிவுரை படி இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த மீனவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிரேட் பேஸ்ஸஸ் கலங்கரை விளக்கத்திலிருந்து 8 கடல் மைல்கள் சென்று சம்பவ இடத்தை அடைந்த இலங்கை கடற்படையின் அதிவேக தாக்குதல் படகின் மூலம் குறித்த இயந்திரத் கோளாறுகுள்ளான படகு ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு பாதுகாப்பாக எடுத்துவரப்பட்டதுடன், பாதுகாப்பாக அழைத்துவரப்பட்ட மீனவர்கள் அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்