தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்படையினரினால் சுத்திகரிப்பு நிகழ்வுகள் முன்னெடுப்பு
 

தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு கடற்கரைகள் மற்றும் சதுப்புநிலங்கள் கொன்ட சூழலை சுத்தம் செய்யும் திட்டங்களுக்காக கடற்படையினர்கள் பங்களிப்பு வழங்கியது. அதன் பிரகாரமாக இன்று (ஜூன் 03) கிழக்கு மற்றும் மேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக வைத்து கடற்கரைகள் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அதன் பிரகாரமாக இலங்கை இராணுவம் மற்றும் லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள் மேற்கு கடற்படை கட்டளையின் வீரர்களுடன் மட்டக்குலி காகதீவு நீரேரிப்பகுதியை சுத்தப்படுத்துவதற்கு உதவிகளை வழங்கியுள்ளனர். இத் திட்டத்துக்காக அப் பகுதி மக்களும் கழந்துகொன்டனர்.

மேலும் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்துடன் இனைந்து கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் திருகோணமலை உள் துறைமுகம் உட்பட துறைமுகம் கடற்கரை சுத்தம் செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுப்பொருட்களை உள்ளடக்கிய குப்பை மற்றும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நீரில் மிதந்து வரும் பொருட்கள் என்பன பாதுகாப்பாக அகற்றப்பட்டன.

மட்டக்குலி, காகதீவு பகுதி கடற்கரை சுத்தம் செய்தல்

 

 

 

 

 

 

 

 

 

 

திருகோணமலை உள் துறைமுகம் உட்பட துறைமுகம் கடற்கரை சுத்தம் செய்தல்