காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை கடற்படையினரினால் முன்னெடுப்பு
மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிஷாந்த உலூகேதென்ன அவருடைய வழிமுறைகள் படி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் கொழும்பு நகரிலுள்ள காலி முகத்துவாரத்தை சுத்தப்படுத்தும் நிகழ்வினை இன்று (ஜூன், 02) மேற்கொண்டுள்ளனர். நூற்றுக்கணக்கான பார்வையாளர்களால் தினசரி பொழுதுபோக்குக்காக பயன்படுத்தப்படும் பிரபலமான இவ் இடத்தில் அன்றாடம் இவர்களால் அதிக அளவு குப்பைகள் விட்டுச்செல்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
இத் திட்டத்துக்காக மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ரங்கல, பராக்கிரம மற்றும் கெலனி ஆகிய நிருவனங்களின் 50 கடற்படையினர்கள் கழந்துகொன்டனர். இதன்போது, பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுப்பொருட்களை உள்ளடக்கிய குப்பை மற்றும் சூழலுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் நீரில் மிதந்து வரும் பொருட்கள் என்பன பாதுகாப்பாக அகற்றப்பட்டன.
மேலும் இத் திட்டம் மூலம் இலங்கையில் உள்ள குப்பை மேலாண்மை சிக்கலுக்காக ஒரு நிலையான தீர்வு எதிர்காலத்தில் வழங்கப்படும். அதே போன்ற பிளாஸ்டிக், பாலிதீன் மற்றும் குப்பை ஆகியவற்றை இல்லாத இலங்கையொன்று கடற்படை உருவாக்குகின்றது.