தேசிய சுற்றுச்சூழல் வாரத்திற்கு கடற்படையின் பங்களிப்பு
 

ஜூன் 5 ம் திகதிக்கி ஈடுபட்டு இருக்கும் உலக சுற்றுச்சூழல் தினத்திற்கு இணையாக இலங்கையில் தேசிய சுற்றுச்சூழல் வாரம் ஒன்று மே 30 முதல் ஜூன் 5 ஆம் திகதி வரை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட நீர்கொழும்பு சதுப்பு நிலக்காடுகள் சுத்திகரிப்பு திட்டத்துக்காக இலங்கை கடற்படை தனது பங்களிப்பை வழங்கியது.

இந்த திட்டம் மூலம்  பயன்படுத்தபட்ட பாலித்தீன், பிளாஸ்டிக்குகள் மற்றும் உயிரற்றமல்லாத பொருட்கள் அகற்றப்பட்டது. இதுக்காக இரானுவ மற்றும் விமானப்படை, பல்கலைக்கழக மாணவர்கள், அரச நிறுவனங்கள், மத்திய சுற்றுச்சூழல் ஆணையம், கடலோர பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களம், நீர்கொழும்பு பிரதேச செயலகம், மீன்வளத்துறை அமைச்சகம், மீனவர்கள் சங்கங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களின் அதிகாரிகள் ஆகியோர் உட்பட 700 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இன் நிகழ்வுக்காக கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ பணிப்பாளர் நாயகம் காமினி ஹேவகே, நீர்கொழும்பு பிரதேச செயலாளர் அலவத்த, கடல்சார் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவர், ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் பீ.ஏ.டி.ஆர் பெரேரா, கடல்சார் சுற்றுச்சூழல் ஆணையத்தின் துணை பொது மேலாளர் செயல்பாடுகள் கொமான்டர் எம்.ஏ.ஜே பிரியந்த ஆகியோர் உட்பட பல பேர் கழந்துகொன்டனர்.