இலங்கை கடற்படையினரால் கிணறுகளை சுத்திகரித்தல் பணிகள் முன்னெடுப்பு
அனர்த்தத்தின் பின்னர் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதான அடிப்படை தேவையான சுத்தமான குடிநீரை பெற்றுக்கொடுப்பதில் கடற்படையினர் உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹொரண, களுத்துறை, அகலவத்த, கம்பஹா, போபிட்டிய, புத்தளம் மற்றும் நாத்தாண்டியா பிரதேசங்களில் சுமார் 254 க்கும் மேற்பட்ட கிணறுகளை சுத்திகரிப்பு உபகரணங்கள் மூலம் கடற்படை நிவாரணக் குழுவினர் சுத்திகரித்துள்ளனர். வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான சுகாதார பிரச்சனைகள் ஏற்படும் ஆபத்திலிருந்து பாதுகாக்கும்பொருட்டு இச்சேவைகளை இவர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.
இதன்பிரகாரம் நாத்தாண்டியா பிரதேச மக்களின் நலன் கருதி ஏற்கனேவே நடமாடும் குடி நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது.