கடற்படையின் வருடாந்த லொஜிஸ்டிக் மாநாடு
 

கடற்படை மற்றும் கடல்சார் அகாடமி (NMA), இலங்கை கடற்படையின் கடற்படைப் பயிற்சிக்கான கேட்போர் கூடத்தில் அதன் வருடாந்த லொஜிஸ்டிக்ஸ் மாநாடு வெள்ளி (மே, 25) இடம்பெற்றுள்ளது. மூன்றாவது முறையாக திருகோனமலையில் இடம்பெறும் “லொஜிஸ்டிக்ஸ் மாநாடு 2018” “ஒரு நிதிசார் மையமான இலங்கை: வாய்ப்புகள் மற்றும் சவால்கள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பித்த இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி அவர்கள் முக்கிய உரை நிகழ்த்தினார். இதன்போது, கடற்படை தளபதி, வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க அவர்களால் ஆரம்ப உரை நிகழ்த்தப்பட்டது.

இம்மாநாட்டின் அமர்வுகளில் “அரச கொள்கையில் நிதி ஒழுங்குமுறை பயன்பாடு மற்றும் நிதி மையமான கட்டுப்பாடு”, “வெளிநாட்டு நேரடி முதலீடுகள் மற்றும் 'தெற்காசிய பிராந்தியத்தில் ஒரு நிதி மையமாக ஆவதற்கு பொருளாதார வளர்ச்சியின் விளைவு' மற்றும் பிராந்தியத்தில் ஒரு நிதி மையமாக மாறும் இலங்கையுடனான இராணுவ அம்சங்களின் ஒத்துழைப்பு. போன்ற தலைப்புகளில் கலந்துரையாடப்பட்டன. லொஜிஸ்டிக்ஸ் மாநாடு பேராசிரியர் ரஞ்சித் பண்டார அவர்களின் கருத்துக்களுடன் நிறைவுற்றது.

இம்மாநாட்டில், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள், அறிஞர்கள், பல்கலைக்கழக, அரச மற்றும் கூட்டுறவு துறை பிரதிநிதிகள், பங்களாதேஷ், இந்திய மற்றும் பாக்கிஸ்தான் கடற்படை லொஜிஸ்டிக்ஸ் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து சிறப்பித்தனர்.