கடற்படையினரின் நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்ற வண்ணமுள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களில் ஏற்பட்ட பாரிய வெள்ளம், நாட்டில் மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்காக 49 கடற்படை குழுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்றையதினம் கடற்படைக்கு சொந்தமான 49 படகுகளுடன் குறித்த குழுவினர் நடவடிக்கைகள் மேற்கொள்கின்றனர்.
இரத்தினபுரி மாவட்டத்துக்கு விழுகின்ற மழை காரணமாக அயகம, எலபாத, மடபத்தர, விஹாரகங்கொடை, பல்லெகெதர, தம்புலுவாவ ஆகிய பகுதிகளில் நீர் நிலை இன்னும் குரை இல்லாத வகையில் அப் பகுதி மக்களில் அன்றாட வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. மக்களின் தினசரி தேவைகளுக்காக கடற்படை அவசரநிலை பதில், நிவாரண மற்றும் தீர்வு பிரிவின் (4RU) வீர்ர்களால் போக்குவரத்து வசதிகள் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
கடுவெல பியகம ஊடாக கெலனி ஆற்றின் இரு புறமும் இணைக்கப்பட்டு கட்டப்பட்ட பாலம் ஆறு வாங்கிகளின் அரிப்பு காரணத்தினால் ஆபத்தாக உள்ளது. கடற்படை நிவாரணக் குழுக்கள் முந்தைய நாள் 04.30 மணி முதல் மணல் முட்டைகள் பயன்படுத்தி நதிக் கரையின் அரிப்பைத் தடுக்க கடுமையான முயற்சியை மேற்கொண்டு வருகிறது. தற்போது பழைய கடுவெல பாலத்துக்கு இனையாக கட்டப்படுகின்ற தற்காலிக பாலம் கட்டுவதுக்காக இலங்கை கடற்படை நேற்று (மே 24). முதல் இன்று வரை பங்களிப்பு வழங்குகிறது.
இன்று (மே 25) காலை தப்போவ பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 116 பேர் கடற்படை அவசரநிலை பதில், நிவாரண மற்றும் தீர்வு பிரிவினரால் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துசெல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் பியகம கரனாகம உனசெவன ஹோட்டலில் இருந்த ஒருவர் நீரில் அடித்து சென்று காணமல் போயுள்ளதாகவும் கடற்படை நீர் முழ்கி குழுவினர் தேடும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜா எல தேலதுர பகுதியில் உள்ள கால்வாயின் நீர் விநியோகப் பகுயில் எவ்விதமான வெடிப்புக்கள் எதுவும் ஏற்படதவாறு மண் மூட்டைகள் அமைக்கப்பட்டன.
இப்பொலுது இரத்தினபுரி சபரகமுவ பொது மைதானத்தில் நிருவப்பட்டுள்ள கடற்படை தற்காலிக சமையலறை வழியாக நிவாரண சேவைகளில் ஈடுபடுகின்ற கடற்படையினர்களுக்கும் பாதிக்கப்பட்ட மக்களும் உணவு வழங்கப்படுகிறது. மேலும் கடற்படை வீரர்கள் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.