யாழில் கடற்படையினர் இரத்த தானம்
 

இலங்கை கடற்படையின் வட பிராந்திய கட்டளையகத்தில் கடைமையாற்றும் கடற்படை வீரர்கள், அண்மையில் (ஏப்ரல்,28) இடம்பெற்ற இரத்த தான நிகழ்வில் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர். வட மாகாணத்தின், பிராந்திய இரத்த வங்கியின் இரத்த மாற்றீட்டு வைத்திய அதிகாரியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய வெசாக் திருநாளையொட்டியதாக இவ் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு கடற்படை கட்டளையாகத்தின் கீழ் உள்ள நிறுவனங்கள், கப்பல்கள் மற்றும் கைத்தொழில்களில் பணியாற்றும் கடற்படை வீரர்கள் தானாக முன்வந்து இரத்த தானம் செய்தனர். யாழ் போதனா வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் இடம்பெற்ற இந் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இரத்த வங்கியில் காணப்பட்ட பற்றாக்குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டன.

மேலும், இப்பிராந்தியத்தில் காணப்படும் நோயாளிகளின் நன்மை கருதி வட பிராந்திய கடற்படை கட்டளையகத்தினால் இம்மாதத்தில் (07) இது போன்ற இரத்த தான முகாம் ஏற்கனவே நடத்தப்பட்டது. மேலும், தீவுப் பகுதிகளில் உள்ள மக்களின் நலன்கருதி அவர்களுக்கான மருத்துவ முகாம்களும் கடற்படையினரால் நடத்தப்படுகின்றன. அத்துடன் இங்கு சிகிச்சைகளுக்காக வருகை தரும் நோயாளிகளுக்கு மருந்து மற்றும் ஊட்டச்சத்து என்பன இலவசமாக வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.