அமெரிக்க மருத்துவமனைக் கப்பல் மேர்சி திருகோணமலை துறைமுகத்துக்கு வருகை
பசுபிக் பங்காண்மை நடவடிக்கையை மேற்கொள்ளும் நிமித்தம் அமெரிக்க கடற்படையின் மருத்துவமனைக் கப்பலான யூ.எஸ்.என்.எஸ். மேர்சி இன்று (ஏப்ரல், 25) இலங்கை தீவினை வந்தடைந்தது. பசிபிக் பங்காண்மை - 2018 எனும் நடப்பு ஆண்டுக்கான பன்முக மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயாரிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக நேற்றையதினம் அமெரிக்க கடற்படை கப்பல்களின் முன்னணி கப்பலான 'எஸ்என்எஸ் மேர்ஸி' திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
272.49 மீற்றர் நீளமான இம்மருத்துவமனைக் கப்பலின் அகலம் 32.2 மீற்றர் ஆகும்.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இயற்கை துறைமுகத்திற்கு வருகை தந்த 'மெர்சி மருத்துவமனைக் கப்பலுக்கு' இலங்கை கடற்படையினரால் கடற்படை மரபுகளுக்கமைய வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர் கப்பலின் கட்டளைத் தளபதி கொமடோர் டேவிட் பிரெட்ஸ், கிழக்கு கடற்படை கட்டளைத்தளபதி சந்திப்பதற்காக ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகல்லே அவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்து-ஆசியா-பசுபிக் பிராந்தியத்தில் இடம்பெறுகின்ற அனர்த்த நிலைமைகளின்போது தேவைப்படுகின்ற உபகரணங்களை தயார்நிலையில் வைத்திருத்தல், அத்துடன் மருத்துவம் மற்றும் பலதரப்பட்ட மனிதாபிமான உதவிகள் உள்ளிட்ட அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் பிராந்திய ஒருங்கிணைப்பினை மேம்படுதும் நோக்கில் இத்திட்டங்கள் முன்னேடுக்கப்படுகின்றன.
2016 ஆம் ஆண்டு அமெரிக்க மற்றும் இலங்கை கடற்படையினரிடையே கையொப்பமிடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைவாக 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் பசுபிக் பங்காண்மை திட்டத்தின் தொடக்க பணிக்காக, அமெரிக்க கடற்படை கப்பல் 'போல் ரிவர்' ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டிருந்தது.
இம் மாதம் 25ஆம் திகதி முதல் மே மாதம் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள பசுபிக் பங்காண்மை 2018 நடவடிக்கை, அமேரிக்கா, அவுஸ்திரேலியா, பெரு, கனடா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளிலிருந்து இராணுவத்தினர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆகின பங்கேற்கவுள்ளனர்.
திருகோணமலை பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள், மருத்துவமனைகள், சமூக மையங்களில் நடத்தப்படும் சமூக மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் ஆகியவற்றில் அவர்கள் பங்கெடுக்கவுள்ளனர்.
இத்திட்டத்தின் நிகழ்ச்சி நிரலில், உள்ளுர் மக்களுக்கு சிகிச்சைகளை வழங்கவும் சிறப்பான செயற்பாடுகளை பரிமாற்றிக் கொள்ளவும் இலங்கை மருத்துவ தொழில்சார் நிபுணர்களுடன் இணைந்து பணியாற்றும் அமெரிக்க மற்றும் ஏனைய இராணுவ வைத்தியர்கள் மற்றும் மருத்துவ பணியார்களையும் அது கொண்டிருக்கும். மேலும், கட்டிட பொறியியல் திட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண தயார்நிலை பயிற்சி, மற்றும் உள்ளுர் சமூகம் முழுவதுமான பொதுநலன் நடவடிக்கைகள் ஆகியவற்றில் அமெரிக்க மற்றும் பங்காளி நாடுகளின் படையினர் தங்களது இலங்கை சகாக்களுடன் இணைந்து செயற்படவுள்ளனர்.