இலங்கை கடற்படையின் இரண்டாவது புதிய உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் ரோந்துக் கப்பலுக்கு பிரதமரினால் அதிகாரமளிப்பு
இந்தியாவின் கோவா கப்பல் கட்டும் தளத்தில் இலங்கை கடற்படைக்கென நிர்மாணிக்கப்பட்ட இரண்டாவது நவீன ஆழ்கடல் கண்காணிப்பு ரோந்துக் கப்பல் உத்தியோகபூர்வமாக அதிகாரமளிப்பு இன்று (ஏப்ரல், 19) மாலை 0530 மணிக்கு பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவருடைய தலமையில் கொழும்பு துறைமுக கிழக்கு இறங்குதுறையில் இடம்பெற்றது.
கொழும்பு துறைமுக வளாகத்துக்கு வருகை தந்த பிரதமர் கௌரவ ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு கடற்படை மரபுகளுக்கு அமைவாக விசேட கடற்படை அணிவகுப்பு மரியாதையளிக்கப் பட்டது. பின்னர் பிரதமரினால் புதிய கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் சமன் பெரெராயிடம் கப்பலுக்கான அதிகார பத்திரம் வழங்கப்பட்டது. அவ்வேளை கப்பலின் கட்டளை அதிகாரி குறித்த பத்திரத்தை வாசித்தார். பின்னர் இடம்பெற்ற பெயர்பலகை திரைநீக்கத்தின் பின் பிரதமர், கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க மற்றும் அதிதிகள் ஆகியோர் இக்கப்பலை சுற்றிப்பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதமர் உட்பட வருகைதந்திருந்த அதிதிகள் ஆகியோர் கப்பலினை சுற்றிப் பார்வையிட்டனர். இதன்போது பிரதமர் அவர்களுக்கு கப்பலின் செயற்பாடுகள், தயார்நிலை மற்றும் தயாரிப்பு தொடர்பாக கடற்படை தளபதியினால் விளக்கமளிக்கப்பட்டது. சிந்துரல கப்பல் நவீன தொழில்நுட்பம் மற்றும் சிறப்பு அம்சங்களுடன் வசதிகளையும் கொண்டுள்ளது. 105.7 மீட்டர் நீளம் மற்றும் 13.6 மீட்டர் அகலம் கொன்டுள்ள இக் கப்பலில் 18 கடற்படை அதிகாரிகள் மற்றும் 100 கடற்படை சிப்பாய்கள் ஒரேநேரத்தில் தங்குவதற்கான விசாலமான விடுதி மற்றும் பிற வசதிகளையும் கொண்டு காணப்படுகின்றது. மேலும் இக்கப்பல் இலகு உலங்குவானூர்தி தரையிறங்குவதற்கான இலகுரக ஹெலிகொப்ரர் இறங்குதளத்தையும் அது தரித்து வைப்பதற்கான இடத்தினையும் தன்னகத்தே கொண்டுள்ளது.
இந்நிகழ்வில் மதிப்பிற்குரிய துறவிகள் உட்பட மத குருக்கள், கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர, விவசாயம் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ ருவன் விஜேவர்தன, பாதுகாப்பு செயலாளர் சட்டத்தரணி திரு. கபில வைத்தியரத்ன, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அதிமேதகு நரன்ஜித் சிங் சந்து, பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிங்க, கடற்படையின் துனை தலைமை பணியாளர் மற்றும் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வா, இந்திய கோவா கப்பல் கட்டும் நிறுவனத்தின் அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
.மேலும் இந்திய கடற்படையின் தலைமை பணியாளர் வைஸ் அட்மிரல் அஜித் குமார், விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் கபில ஜயம்பதி ஓய்வுபெற்ற கடற்படை தளபதியவர்கள், முப்படை மற்றும் காவல் துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் உடபட பல அதிதிகளும் இன் நிகழ்வுக்காக கலந்து கொண்டனர்.