வடக்கு கடற்படையினரால் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
 

இலங்கை கடற்படை மூலம் செயல்படுத்தப்படும் சமூக சேவைகளில் இன்னுமொரு படியாக வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்களால் கடந்த 07ஆம் திகதி யாழ்ப்பாணம் மருத்துவமனை இரத்த வங்கியில் இரத்த தான முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் டாக்டர் திருமதி கே.சி.டி செனவிரத்ன அவர்களின் கோரிக்கையின் கீழ் வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்ரமசிங்க அவருடைய வழி காட்டளின் கீழ் நடத்தபட்ட இந்த இரத்த தானம் முகத்தில் வடக்கு கடற்படை கட்டளையில் இணைக்கப்பட்ட பல கனக்கான கடற்படை அதிகாரிகள் மற்றும் வீர்ர்கள் தங்களுடைய இரத்தம் வழங்க கழந்துகொன்டனர்.

வட பகுதியில் அப்பாவி நோயாளிகளின் உயிரை காப்பாற்றுவதுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த பணி வெற்றி பெற யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் பணிப்பாலர் டாக்டர் சத்யமூரதி அவர்கள் உட்பட யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஊழியர்களும் தங்களுடைய ஒத்துளைய்ப்பை வழங்கினார்கள்.