மிலன் 2018 இல் கலந்து கொள்வதற்காக கடற்படை கப்பல்களான சமுதுர மற்றும் சுரனிமல பயணம்
 

இலங்கை கடற்படையின் சமுதுர மற்றும் சுரனிமல எனும் இரு கப்பல்கள் மிலன் - 2018 பயிற்சியில் கலந்து கொள்வதற்காக இந்தியா நோக்கி நேற்றையதினம் (பெப்ரவரி, ௦2) நாட்டை விட்டு புறப்பட்டுச் சென்றன. இவ்விரண்டு கப்பல்களும் இலங்கையின் கிழக்கு பகுதியான திருகோணமலை துறைமுகத்திலிருந்து அந்தமான் தீவின் பிளையர் துறைமுகத்தை நோக்கி பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இன் நிகழ்வுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் துனை தளபதி  கொமடோர் மெரில் சுதர்ஷன அவர்கள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் கழந்து கொன்டனர்.

குறித்த பயிற்சியில் கலந்துகொள்வதற்காக ஆறு கடற்படை பயிலுனர் அதிகாரிகள் மற்றும் 27 கடற்படை அதிகாரிகள் உட்பட 284 கடற்படை வீரர்கள் கப்பல்களுடன் பயணித்துள்ளார்கள்.

மிலன் என அறியப்படும் இக்கடற்படை பயிற்சி இந்தியக் கடற்படையால் ஏற்பாடு செய்யப்படுகின்றது. குறித்த கடற்படைகளுக்கிடையிலான பயிற்சிகள் அந்தமான் தீவின் பிளையர் இம்மாதம் 06ம் திகதி முதல் 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது. "கடல் முழுவதும் நட்பு" எனும் தொனிப்பொருளில் இவ்வருடத்திற்கான மிலன் - 2018 பயிற்சிகள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு கப்பல்களும் வெற்றிகரமாக தனது பயிற்சிகள் முடிவுசெய்த பின் மார்ச் மாதம் 13 ஆம் திகதி தாயகம் திரும்ப உள்ளது.