கடற்படையினரின் உதவியுடன் வருடாந்த கச்சத்தீவு உற்சவம் 2018
 

இவ் ஆலயத்தில் வருடாந்தம் நடைபெறும் திருவிழாவில் இலங்கை மற்றும் இந்திய பக்தர்கள் கலந்து கொள்வது வழக்கம். அதற்கமைய இம்முறை ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் இலங்கை கத்தோலிக்க பக்தர்கள் இங்கு இடம்பெற்ற சமய ஆராதனை நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மற்றும் தமிழ் மொழிகளில் ஆராதனைகள் இடம்பெற்றன. திருவிழாவின் தமிழ் திருப்பலியை, யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜச்டின் ஞானபிரகாசம் அருட்தந்தை மூலமும் சிங்கல மொழி திருப்பலியை காலி மறை மாவட்ட குருமுதல்வர் ஷர்மன் விக்ரமசிங்க அவர்களால் நடத்தப்பட்டுள்ளன. இவ் ஆராதனை நிகழ்வில் சிறுவர் விவகாரங்கள் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், படைகளின் பிரதம அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன, வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா உடபட  சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் முப்படையினர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இம்முறை நடைபெற்ற புனித அந்தோனியார் திருவிழாவில் சுமார் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கச்சதீவு திருவிழாவ்க்கு பங்குபெறும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், சுகாதார வசதிகள், தற்காலிக படகுத்துறைகள் மற்றும் மின்சார வசதிகள் கடற்படை முலம் வழங்கப்பட்டுள்ளன. யாத்ரீகர்களின் பாதுகாப்புக்காக மீட்புக் குழுக்களும் மருத்துவ வசதிகள் வழங்க ஒரு மருத்துவ அதிகாரி உட்பட குழு ஒன்றும் நடவடிக்கைகளிள் ஈடுபட்டுள்ளன.