சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரால் கைது
 

கடந்த தினங்களில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 08 பேர் பல பகுதிகளில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான போதை  மாத்திரைகள் வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான பழகை வைத்திருந்த ஒரு நபர், சட்டவிரோதமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நாங்கு பேர் மற்றும் மெதாம்பிடாமைன் போதை  மாத்திரைகளுடன் (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது.

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 17 ஆம் திகதி மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள்  மற்றும் நாரஹேன்பிட்டி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் அதிகாரிகள் இனைந்து தெஹிவலை பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான போதை  மாத்திரைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு அவரிடம் இருந்து பீகெபரின் (Pregabalin) வகயில் 940 மாத்திரைகள் மற்றும் டெமடோல் வகயில் 254 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்டவர் மற்றும் மாத்திரைகள் நாரஹேன்பிட்டி, தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வழங்கிய தகவலின் படி கடந்த ஜனவாரி 18 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள்  மற்றும் திருகோணமலை ஊழல் எதிர்ப்புப் பிரிவுக்கு இணைக்கப்பட்டுள்ள உத்தியோகத்தர்கள் இனைந்து குபுருபிட்டி  பகுதியில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமான பழகை களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. அங்கு 14 பழகைகள் மற்றும் 03 பழகை தண்டுகள் மறைக்கப்பட்டு இருந்த போது கைப்பற்றப்பட்டதாக குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர் மற்றும் பழகைகள் குச்சவேலி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படைனர்களால் கடந்த ஜனவரி 19  ஆம் திகதி சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட ஒருவர் நொச்சிமூர் கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது. மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, ஒரு சட்டவிரோத  வலை உட்பட மீன்பிடி பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  முலன்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கடந்த ஜனவரி 20 ஆம் திகதி சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில்  ஈடுபட்ட 03 மீனவர்கள் எருமதீவு கடல் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டது.  மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, ஒரு சட்டவிரோதமான  வலை உட்பட மீன்பிடி பொறுட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  புத்தலம் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர்கள் மற்றும் திருகோணமலை போலீஸ் அதிகாரிகள் இணைந்து பாலியுத்து பகுதியில் சட்டவிரோதமான மெதாம்பிடாமைன் போதை  மாத்திரைகள் 08 பகட்டுகளுடன்  (Methamphetamine) இருவர் கைது செய்யப்பட்டது. குறித்த  போதை  மாத்திரைகள் முச்சக்கர வன்டி மூலம் கடத்த முயந்ற போது கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்கள், முச்சக்கர வன்டி மற்றும் போதை  மாத்திரைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக  திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.