தென் பிராந்திய கடற்பரப்பில் மீனவர்களை மீட்பதற்காக கடற்படையினர் விரைவு
தென் பிராந்திய கடற்பரப்பில்மீன்பிடிப் படகொன்று, வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் ஒன்றுடன்மோதியுள்ளது. இவ்வாறு மோதியதில் விபத்துகுள்ளான மீனவர்களை மீட்பதற்காகஇலங்கை கடற்படையினர் செவ்வாய்க்கிழமை இரவு (ஜனவரி, 09) விரைந்துசெயற்பட்டுள்ளனர்.
ஏழு மீனவர்களுடன் ஹிக்கடுவமீன்பிடித் துறைமுகத்திலிருந்து இம்மாதம் முதலாம் திகதி புறப்பட்டுச்சென்ற "நதீஷா II" என்ற பலநாள் மீன்பிடிப்படகு, “எம்வி க்லோவிஸ் கேப்டன்” எனும்வாகனங்களை ஏற்றிச்செல்லும் கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்துஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்துகொண்டிருக்கும் வேளையில் இவ்வாறுமோதி விபத்துகுள்ளகியது.
தெய்வேந்திர முனைகடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்துஇடம்பெற்றுள்ளதாகவும், இதற்காக கடற்படையின் இரண்டு அதிவேக தாக்குதல் படகுகள் (P 492 மற்றும் P 480) மீட்புப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. மீனவர்களில் இருவர் கப்பலின் சிப்பாய்களால்காப்பாற்றப்பட்டுள்ளனர்.
மேலும் இலங்கைகடற்படையினரின் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைளின்போது மேலும் ஒருவரைகாப்பாற்றப்பட்டுள்ளதுடன், பலியான இருவரின் சடலங்களும்கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இவர்கள் விரைவாக காலி துறைமுகத்திற்குகொண்டுவரப்பட்டு கராபிட்டிய போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, சுகவீனம் காரணமாகமரணமடைந்த மீனவரின் பூத உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையினை தொடர்ந்தும் கடற்படையினர்மேற்கொண்டு வருகின்றனர்.