வெற்றிகரமான விஜயத்தின் பின் இந்திய கடற்படை கப்பல் சுட்லேஜ் தாயாகம் திரும்பின
 

இலங்கை கடல் நீரளவியல் கணக்கெடுப்பதுக்காக கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் திகதி கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் சுட்லேஜ் கப்பல் வெற்றிகரமாக தனது விஜயத்தை முடிவு செய்து இன்று (நவம்பர் 08) நாட்டை விட்டு புறப்பட்டுள்ளது. மேலும் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி குறித்த கப்பல்களை அனுப்பிவைத்தனர்.

இந்திய- இலங்கை கடற்படையினர் இணைந்து மேற்கொண்ட நீரளவியல் கணக்கெடுப்பின் இரண்டாவது கட்ட செயற்பாடுகள் டிசம்பர், 19 தினம் நிறைவுற்றது. இவ்வளவீடு, கொழும்பு முதல் காலி வரையிலான கடற்பிராந்திய கடலோரத்தில் இருந்து 200 மீட்டர் ஆழம் வரை விஸ்தரிக்கப்பட்டது. இதேவேளை, அடுத்த வருடம் கிரேட் பேசஸ் இலிருந்து சங்கமன்கந்த வரை மூன்றாவது கட்ட நீரளவியல் கணக்கெடுப்பினை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறித்த கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ள காலத்தில் இலங்கை கடற்படையினருடன் இணைந்து பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றனர்.