இந்தியாவில் கைப்பற்றப்பட்ட 03 மீன்பிடி படகுகள் மீள ஒப்படைக்கப்பட்டன
இந்திய கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 03 இந்திய மீன்பிடி படகுகள் நேற்று (டிசம்பர் 14) இலங்கையிடம் மீள ஒப்படைக்கப்பட்டன. இந்திய கடல் எல்லைப்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றத்திற்காக இப்படகுகள் இந்திய கடலோர காவல்படையினறால் கைப்பற்றப்பட்டது. இந்த பணி இந்தியாவிற்கும் இலங்கைகும் இடையிலான இருதரப்பு நட்புக்கு ஒரு அடையாளமாக இருந்தது.
குறித்த படகுகள் காங்கேசன்துறை வடக்கு சர்வதேச கடல் எல்லைப்பகுதியில் வைத்து இலங்கை கடலோர காவற்படை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக இலங்கை கடலோர காவற்படையின் ஒரு ரோந்து படகும் இந்திய கடலோர காவல்படையின் அபக்னா கப்பலும் கழந்துகொண்டது. இலங்கை கடற்படையினரால் அப்படகுககள் பாதுகாப்பாக கங்கசந்துரை துறைமுகத்திற்கு கொண்டு வந்த பின்னர் யாழ் கடற்றொழில் உதவிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குறித்த மீன்பிடி படகுகள் 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் நாகபத்வான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக கிறிப்பிடத்தக்கது.