திருகோணமலையில் கடற்படையின் விஷேட உள்ளக பயிற்சி - 2017
 

இலங்கை கடற்படையின் கிழக்கு கடற் பிராந்திய கட்டளையாகத்தினால் இரண்டாவது தடையாகவும் ஒழுங்கு செய்யப்பட்ட விஷேட உள்ளக பயிற்சி நிகழ்வு திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் இடம்பெற்றது.

"பாதுகாப்பான கடலுக்காக ஒன்றிணைதல்' என்ற தொனிப் பொருளில் நடைபெற்ற இந்நிகழ்வில், இலங்கை கடற்படை, இராணுவம், விமானப்படை, கடலோர பாதுகாப்புப்படை, விசேட அதிரடிப்படை, பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம், அனர்த்த முகாமைத்துவ நிலையம், கடல்வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை, மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட 10 நிறுவனங்களின் பிரதிநிதிகளின் பங்கேற்றனர்.

இவ் விஷேட உள்ளக பயிற்சி நிகழ்வு, பங்காளர்கள் எனும் வகையில் ஒன்றிணைந்து செயற்படுதல், திறன்களை ஒருங்கிணைத்தல், பிரச்சினைகளை அடையாளப்படுத்தல் மற்றும் தீர்வினை முன்வைத்தல் என்பவற்றில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.