சிகிச்சைக்காக வெளிநாட்டு கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர கடற்படை உதவி
சர்வதேச கடல் எல்லைப் பாதையில் சென்ற ஈரானிய கடற்படை கப்பலில் கப்பல் பணியாளர் ஒருவரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினர் இன்று (டிசம்பர் 14) காலை உதவியளித்துள்ளனர்.
அபாய அழைப்பினை மேற்கொண்ட குறித்த கப்பல் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு இலங்கை கடற்படையின் அதிவிரைவு தாக்குதல் படகான P 4443 அனுப்பி வைக்கப்பட்டது. திருகோணமலை லிருந்து சுமார் 60 கடல் மைல்கள் தொலைவில் உள்ள ஆழ்கடல் பிரதேசத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலுக்கு விரைந்த இலங்கை கடற்படை வீரர்கள் உபாதைகளுக்கு ஆளான குறித்த கப்பல் பணியாளரை தங்களது படகிற்கு மாற்றி அதிவிரைவாக கரைக்கு கொண்டுவந்தனர். கரைக்கு கொண்டுவரப்பட்ட அவர் திருகோணமலை கடற்படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதக்கு முன்னர், கடற்படைக் கப்பல்கள், வணிகர் மற்றும் சரக்குக் கப்பல்கள், தனிப்பட்ட போக்குவரத்துக் கப்பல்கள் ஆகிய பல கப்பல்களில் பணியாளர்கள் சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படை உதவியளித்தது.
கடலில் பயணிக்கும் கடற்படை கப்பல்கள் மற்றும் கப்பல்களுக்கு அத்தகைய மனிதாபிமான உதவிகள் வழங்குவதற்கும், நிவாரணம் வழங்குவதற்கும் கடற்படை தொடர்ந்து தன்னுடைய கடமை உறுதியளித்துள்ளது.