கடற்படை 67 ம் ஆண்டு நிறைவு பாரம்பரிய நடைமுரைகளுக்கமைய கொண்டாடப்படுகிறது
 

“ஸ்பிலைஸிங் த மெயின் பிரேஸ்” என்பது, ராயல் கடற்படையிடமிருந்து மரபுவழி வந்த ஒரு கடற்படை பாரம்பரியமாகும். முதலில் அது, ஒரு கப்பலில் மிகவும் கடினமான அவசர பழுது பார்ப்பு வேலைகள் செய்யும் பொருட்டு விடுக்கப்பட்ட ஒரு கட்டளையாக அமைந்தாலும்; பின்னர் அது கொண்டாட்ட மது அருந்துவதத்கான அங்கீகரிக்கப்பட்ட ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொள்ளப்பட்டு, கப்பல் குழுவில் இருந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் ஒரு ‘டாட்’ அளவு ரம் மதுபானம், மதிய போசனத்திட்கு முன் வழங்கப்பட அளிக்கப்பட அனுமதியினை குறிக்கும் பெயராகவும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இச்சந்தர்ப்பத்தின் போது கப்பலின் கட்டளை அதிகாரி கப்பல் குழுவினருடன் ஒரே மேசையில் அமர்ந்து மதியபோசனம் உட்கொள்வார். இச்சந்தர்ப்பம் கடற்படை வட்டாரத்தில் “பராகானா’ என்று அழைக்கப்படும். இது கடற்படையின் அனைத்து கப்பல்களின் மற்றும் ஸ்தாபணங்களின் கட்டளை அதிகாரியின் விருப்பத்திட்கமைய விசேட சந்தர்ப்பங்களில் மாத்திரம் மேட்கொள்ளப்படும். இவ்விசேட சந்தர்ப்பத்திற்கு அவ்விடங்களில் சேவையாற்றும் சிவில் ஊழியர்களும் அழைக்கப்படுவர். மேலும் இவ்விருந்துபசார நிகழ்வு கட்டளை அதிகாரிகளுக்கு கப்பலின் மற்றைய அனைத்து ஊழியர்களுடன் ஒன்றிணைந்து சகஜமாக அலவளாவ சந்தர்ப்பமாகவும் அமையும்.

இலங்கை கடற்படை இன்றைய தினம் (09 டிசம்பர்) அதன் 67ம் ஆண்டு நிறைவை இவாறான பாரம்பரிய பழக்கவழக்கங்கள் மற்றும் அணிவகுப்பு ஆய்வுகளுடனும் அனைத்து கப்பல் மற்றும் ஸ்தாபனங்களிலும் நடத்தி கொண்டாடுகின்றது.