இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (CBRN) அவசர பதிலளிப்பு பற்றி பட்டறை
இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear) அவசர பதிலளிப்பு பற்றி பட்டறை ஒன்றினை கடந்த நவம்பர் மாதம் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் இடம்பெற்றது. இங்கு வரவேற்பு விரிவுரை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்தில் தளபதி கச்சப போல் அவர்களினாலும் இங்கு பிரதான விரிவுரை இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறைக் குழுவின் பணிப்பாளர் நாயகம் அனில் ரன்ஜித் அவர்களினாலும் நடத்தப்பட்டது.
இரண்டு நாட்களாக இடம்பெற்ற குறித்த பட்டறை கோட்பாட்டு மற்றும் துறையில் பயிற்சிகள் கொன்டுள்ளதாக குறுப்பிடத்தக்கது. இலங்கை அணு சக்தி ஒழுங்குமுறை கவுன்சில் மற்றும் இலங்கை இரசாயன ஆயுதக் கழகத்தின் தத்தெடுப்பு தொடர்பாக தேசிய அதிகாரசபையின் அதிகாரிகள் இப் பட்டறையில் விரிவுரைகள் நடத்தியுள்ளனர்.
குறித்த பட்டறைக்காக 27 அதிகாரிகள் மற்றும் 55 வீரர்கள் கழந்துகொன்டனர். இவர்களுக்கு இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசக்தி (CBRN) அவசர பதிலளிப்பு பற்றி கோட்பாட்டு அறிவு மற்றும் நடைமுறை அறிவு ஆகியவை வழங்கப்பட்டன. இன் நிகழ்வுக்காக மூத்த பணியாளர்கள் அதிகாரி (அணு உயிரியல் இரசாயன பாதுகாப்பு) கமான்டர் (பொறியியல்) மஞ்சுள பியதிலக அவர்களும் கலந்து கொண்டனர்.