காங்கேசன்துறை மாவடிபுரம் பகுதியில் மக்களுக்கு இலங்கை கடற்படையினரின் மருத்துவ சிகிச்சை
 

மாவடிபுரம் மாதிரி கிராமத்தில் புதிதாக மீளக்குடியமர்ந்த பொதுமக்களுக்கான நடமாடும் மருத்துவ முகாம் ஒன்று இலங்கை கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டன.

வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. குறித்த சிகிச்சை முகாமில் சுமார் 250 பேர் கலந்துகொண்டு சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர்.

இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், குழந்தை பராமரிப்பு, வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள், பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு, கர்ப்பகால பராமரிப்பு மற்றும் கடுமையான / நாட்பட்ட உடல்நல நோய்கள் ஆகியன அவதானிக்கப்பட்டு ஆரம்பகட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டது. பொதுமக்களின் நலன் கருதி கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக நலத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை திரிபோஷா நிறுவனம் ஆகியன இச்சிகிச்சைகளுக்கு தேவையான மருந்துகள் மற்றும் சத்துணவு விநியோகம் என்பவற்றை வழங்கியுள்ளன.