தடை செய்யப்பட்ட 710 கிலோகிராம் உரமுடன் இரண்டு இந்தியர்கள் கடற்படையினரால் கைது
 

வட மத்திய கடற்படை கட்டளையின் கடலோர ரோந்து கப்பல்கள் முலம் இன்று (நவம்பர் 25) காலையில் மன்னார் கலங்கரை விளக்குக்கு தெற்கு திசையில் இலங்கை கடல் பகுதியில் வைத்து இரண்டு இந்தியர்களுடன் ஒரு இந்திய மீன்பிடி படகு (Dhow) கைது செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட குறித்த படகு சோதிக்கும் போது அதில் இருந்து தடை செய்யப்பட்ட 710 கிலோகிராம் கிளைபோசட் வகையில் உரம் பொதிகள் கன்டுபிடிக்கப்பட்டது.

மீன்பிடி என்ற பெயரில் சட்டவிரோதமாக குறித்த உரம் பொதி கடல் வழியாக இலங்கைக்கு கொன்டுவர முயற்சித்ததாக சந்தேகிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள இந்தியர்கள், மீன்பிடி படகு, உரம் பொதி மற்றும் பொறுற்கள் மன்னார் இலங்கை கடற்படை கப்பல் கஜபா நிருவனத்துக்கு கொன்டுவந்த பின் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.