கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் ஸ்ரீ மஹா போதி அருகில்
09 டிசம்பர் 2017 திகதி ஈடுபடும் இலங்கை கடற்படை 67 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகள் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரனசிங்க அவருடய தலைமயில் ஸ்ரீ மஹா போதி அருகில் நேற்று (நவம்பர் 20) இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திரு சந்தியா ரனசிங்க அவர்களும் கலந்துகொண்டார்.
கடற்படையினரால் ஆராவது முறையாகவும் ஏற்பாடுசெய்யபட்ட இம் மத வழிபாடுகளில் தேசியக் கொடி, பவுத்த மத கொடி, கடற்படை கட்டளைகளின், கப்பல்களின், நிறுவனங்களில் சேர்ந்த 82 கொடிகள் ஆசிர்வாதிக்கப்பட்டது. ஸ்ரீ மஹா போதியின் மற்றும் சங்க ஆசீர்வாதம் பெற்றுக் கொள்வதுக்காக நடைபெற்ற இந் நிகழ்வு அனுராதபுர அடமச்தான மகா சங்கத்தினர் தலைமயில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்காக கடற்படைப் பணியாளர்களின் முதன்மை ரியர் அட்மிரல் நீல் ரொஸய்ரோ, வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் மெரில் விக்கிரமசிங்க அவர்கள், கடற்படை தலைமையகத்தில் மற்றும் வடமத்திய கடற்படை கட்டளைத்தில் இணைக்கப்பட்ட அதிகாரிகள், வீர்ர்கள் மற்றும் பக்தர்களும் கலந்து கொண்டனர். மேலும் கடற்படை கொடிகளுக்கு ஆசிர்வாதிக்கும் மத வழிபாடுகளுக்கு இனையாக கடற்படை பவுத்த மத சங்கம் மூலம் ஏற்பாடுசெய்யபட்ட கப்ருகா பூஜயும் அனுராதபுர ருவன்வலி மகா சேய அருகில் இடம்பெற்றது.
இன் நிகழ்வுக்கு இனையாக ஸ்ரீ மஹா போதியின் வழிபடுகளுக்காக வருகின்ற பக்தர்களின் குடிநீர் வசதி நிவர்த்தி செய்வதுக்காக நிருவப்படுள்ள நீர் சுத்திகரிப்பு இயந்திரமொன்ரும் கடற்படை தளபதி அவர்களால் மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது. இன் நிகழ்வுக்காக அநுராதபுரம் அடமஸ்தானாதிபதி வட மத்திய திஸையின் பிரதான சங்கத் தேரர் கலாநிதி பல்லெகம சிரிநிவாசாபிதான தலமை தேரர் உட்பட சங்க தேரர்கள் மூத்த கடற்படை அதிகாரிகள் மற்றும் பக்தர்கள் கழந்துக்கொன்டனர். குறித்த நீர் சுத்திகரிப்பு இயந்திரத்துக்காக புத்த சாசன அமைச்சு நிதியுதவி வழங்கியுள்ளதுடன் கடற்படையினரால் நிருவப்பட்டது.
கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை
கப்ருகா பூஜை வழிபாடுகள்
நீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு