வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரால் நய்நதீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
 

வடக்கு கடற்படை கட்டளையகத்திற்கு உட்பட்ட இலங்கை கடற்படையினர் யாழ் மாவட்ட நய்நதீவில் உள்ள நய்நதீவு ரஜமஹா விஹாரையில் நடமாடும் மருத்துவ சிகிச்சை முகாம் ஒன்றினை அண்மையில் (நவம்பர் 18) நடாத்தியுள்ளனர்.

வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது. கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சமூக சேவையினூடாக இத்தீவில் வசிக்கும் புதிதாக மீள்குடியமர்த்தப்பட்ட 350 பேர் தமது நோய்களுக்கான சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர்.

மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான / நீண்டகால உடல்நல நோய்கள், அத்துடன் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன அவதானிக்கப்பட்ட பின்னர் .ஆரம்ப கட்ட சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன மேலும் இதுக்காக நய்நதீவு ரஜமஹா விஹாரயின் விஹாராதிபதி வட மாகாணத்தின் பிரதான சங்கநாயக்க பேராசிரியர் தர்ம கீர்த்தி மதிப்புக்கூறிய நவதகல பதுமகீர்தி திஸ்ஸ தேரரின் ஆதரவு வழங்கப்பட்டது. நோயாளிகளுக்கு அனைத்து ஆய்வக பரிசோதனைகள் மற்றும் மருந்துகளும் இலவசமாக வழங்கப்பட்டதுடன், கடற்படையின் குறித்த சமூக சேவைக்காக அரச மருந்தக கூட்டுத்தாபனம் மற்றும் திரிபோசா லங்கா லிமிட்டெட் ஆகியன மருந்துவகைகள் மற்றும் ஊட்டச்சத்து உணவு வகைகளை வழங்கி ஒத்துழைப்பு நல்கின.