இலங்கை கடற்படையின் சயுரல கப்பல் தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது
தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வில் (ASEAN IFR 2017) மற்றும் அது தொடர்பான பயிற்சிகளில் கலந்துகொள்வதற்காக கடந்த 09ஆம் திகதி நாட்டைவிட்டு புறப்பட்டு சென்ற இலங்கை கடற்படை கப்பல் சயுரல இன்று (நவம்பர் 16) தாய்லாந்தில் பதாயா துறைமுகத்திற்கு வந்தடைந்தது.
இங்கு தாய்லாந்து கடற்படையின் லெப்டினென்ட் ஜே.ஜி. கியேட்பும் சபென்பொன்க் அவர்கள் மற்றும் இலங்கை கடற்படையின் கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் கபில சமரவீர, சயுரல கப்பலின் கட்டளை அதிகாரி கேப்டன் நிஷாந்த அமரோசா, நிர்வாக அதிகாரி கொமான்டர் எமிந்த கருனாசேன ஆகியோர் இடையில் நடைபெற உள்ள சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வு பற்றி கலந்துரையாடப்பட்டது.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் சங்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு இம்மாதம் (நவம்பர்) 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை தாய்லாந்தின் பட்டயாவில் குறித்த சர்வதேச கப்பற்படை மீளாய்வு நிகழ்வு இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது. இப் பயிற்சிகளில் 19 தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தி 26 கடற்படை கப்பல்கள் கலந்துகொள்ள உள்ளது.