கடற்படை தலைமை பணியாளராக ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ கடமையேற்பு
கடற்படையின் புதிய தலைமை பணியாளராக நேற்று (நவம்பர் 08) நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் கடற்படை தலைமையகத்தில் உத்தியோகபூர்வமாக கடமைகள் தொடங்கினார். கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க அவர்களால் நியமனம் கடிதத்தை வழங்கப்பட்டன.
அங்கு கடற்படை தளபதியவர்களால் புதிய பதவியில் கடமையேற்றிய ரியர் அட்மிரல் ரொசாய்ரோ அவர்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்கலை தெரிவித்தார். அதன் பிரகு மத சடங்குகளுக்கு முன்னுரிமை கொடுத்து இவர் புதிய பதவியின் கடமைகள் தொடங்கினார்.
இவர் இப் பதவிக்காக நியமிக்கபட முன் கடற்படை துனை தலைமை பணியாளராக மற்றும் இலங்கை தொண்டர் கடற்படையின் தளபதியாக பணியாற்றினார். ரியர் அட்மிரல் நீல் ரொசாய்ரோ அவர்கள் கம்பஹா பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தில் பிரகாசமான பழைய மாணவராவார். அவர் 1982 ஆண்டில் 11 வது ஆட்சேர்ப்புக்கு சொந்தமான கெடட் அதிகாரிகாரியாக இலங்கை கடற்படையில் இணைந்து கொண்டு தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த பிறகு 1985 ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி சப் லெப்டினன்ட் ஆக ஆணையளிக்கப்பட்டார். அதன்பிறகு, படிப்படியாக பதவி உயர்வு பெற்று 2011 ஆண்டு ஜூலை மாதம் 01ஆம் திகதி ரியர் அட்மிரல் தரத்துக்கு உயர்வு பெற்றார்
அவரது பதவி காலத்தில் 03 ஆண்டுகளாக இந்தியாவில் இலங்கை உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றினார். தெக்கு கடற்படை கட்டளையின் துனைத் தளபதி, மேற்கு கடற்படை கட்டளையின் துனைத் தளபதி மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையின் துனைத் தளபதி அகிய பதவிகளிலும் பணியாற்றினார். மேலும் இவர் இயக்குனர் கடற்படை செயல்பாடுகள், கடற்படை தளபதியின் உதவியாளர், இயக்குனர் கடற்படை வெளிநாட்டு நடவடிக்கைகள், மரையின் படை இயக்குனர், இயக்குனர் கடற்படை செயற்திட்டங்கள் மற்றும் திட்டங்கள், கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாகவும் பணியாற்றினார்.
ரியர் அட்மிரல் ரொசாய்ரோ அவர்கள் இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் மூலோபாய மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளில் அரிவியல் பெற்றுள்ளார். இவர் 1985 ஆண்டிலிருந்து எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதம் அழிக்க கடல் சார்ந்த மற்றும் நில-அடிப்படையிலான நடவடிக்கைகளுக்கு தீவிரமாக பங்களித்தார். இவரின் இந்த திறமைக்கு ரனசூர பதக்கம் வழங்கப்பட்டது. மேலும், பூர்ன புமி பதக்கம், இலங்கை ஆயுத நீண்ட சேவைகள் பதக்கம், வட கிழக்கு போர் பதக்கம், ரிவிரச போர் பதக்கம், 50 வது சுதந்திரம் கொண்டாட்டம் பதக்கம், இலங்கை கடற்படையின் 50 வது ஆண்டுவிழா பதக்கம், உத்தம சேவா பதக்கம், வெளி நாடு சேவை பதக்கம் மற்றும் வட கிழக்கு மனிதாபிமான நடவடிக்கைகள் பதக்கங்களும் பெற்றுள்ளார்.
பாடசாலை சௌளும் காலத்தில் இருந்து இவர் ஒரு திறமையான விழையாட்டு வீர்ரானர். இவர் இலங்கை கடற்படை கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவம் செய்வதற்கும் தகுதிபெற்றார். தமாரா பஸ்னாயக்க என்பவரை திருமனம் செய்த இவர் இரன்டு மகள்களின் (21) தந்தெயுமாவார்.