இந்திய கடற்படை கப்பல் “சுட்லெஜ்’ கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
இந்திய கடற்படையின் “சுட்லெஜ் கப்பல்” இலங்கை கடல் எல்லை வரைபடங்கள் அடயாழம் இடுதலுக்கான கூட்டு திட்டத்தில் பங்கேற்க நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. குறித்த நிகழ்வுக்காக இலங்கையின் இந்திய உயர் ஆணையாளர் அலுவலகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அசோக் ராவொ அவர்களும் கழந்துக்கொன்டார்.
அதன் பிரகு பாதுகாப்பு ஆலோசகர், கேப்டன் அசோக் ராவொ மற்றும் சுட்லெஜ் கப்பலின் கட்டளை அதிகாரியான கொமான்டர் டிபுவான் சிங் பார்க் ஆகியவர்கள் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்களை சந்திதித்துள்னைர். இச் சந்திப்பில் எதிர்கால திட்டங்கள் பற்றி பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
அதின் பிரகாசமாக இலங்கை கடல் எல்லையில் தரித்திருக்கவுள்ள காலத்தில் இந்திய கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினர் இனைந்து இலங்கை கடல் எல்லைகள் வரைபடங்கள் அடயாழம் இடுதலுக்கான திட்டங்கள் தொடங்க உள்ளனர். மேலும், டிசம்பர் 21 வரை அளவீட்டு நடவடிக்கைகளுக்காக தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.