கொரிய கடற்படையின் 02 கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருகை
 

நல்லெண்ண விஜமொன்றை மேற்கொண்டு கொரிய கடற்படையின் “கேன்க் கம் சேன்” மற்றும் “ஹ்சாசன் கப்பல்கள் நேற்று (ஒக்டோபர், 26) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது. வருகை தந்த குறித்த கப்பல்களை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கமைய மரியாதை செலுத்தி வரவேற்றுள்ளன. குறித்த நிகழ்வுக்காக இலங்கையின் கொரிய தூதுவர் வொன்-செம் சாந்க் அவர்களும் கழந்துக்கொன்டார்.

அதன் பிரகு கொரிய கடற்படையின் பயிற்சி பணிக்குழுவின் தளபதி ரியர் அட்மிரல் யங் யொந்க் மோ அவர்கள் உட்பட கப்பல்களின் கட்டளை அதிகாரிகளான கேப்டன் பார்க் சென்க் ஜு மற்றும் கேப்டன் லீ யன் ஒ ஆகியவர்கள் மேற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் வைத்து மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ் ஆடிகல அவர்களை சந்திதித்துள்னைர். இச் சந்திப்பில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

மேலும், நாங்கு நாட்கள் தரித்திருக்கவுள்ள இக்கப்பலின் சிப்பந்திகள் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு நிகழ்வுகள் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். இதேவேளை, குறித்த கப்பல் இம்மாதம் (ஒக்டோபர்) 29 ஆம் திகதி புறப்படவுள்ளது.