அட்மிரல் ட்ரவிஸ் சின்னையா அவர்கள் கடற்படை சேவையில் ஓய்வுபெற்றார்
ஆயுதப்படைகளின் தளபதி, இலங்கை ஜனநாயக குடியரசின் அதிமேதகு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன அவர்களால் அட்மிரல் ட்ரவிஸ் சின்னையாவுக்கு நேற்று (ஒக்டோபர் 26) பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளதுடன் (ஒக்டோபர் 26) தமது 35 வருட கடற்படை சேவைக்கு பிரியாவிடையளித்து ஓய்வு பெற்றார்.
அதின் பிரகாசமாக இன்று (செப்டம்பர் 26) கடற்படைத் தலைமையகத்தில் வைத்து 48 பேர் கொன்ட சிறப்பு அணிவகுப்பு மரியாதை அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு கடற்படை இயக்குநர்கள் குழு மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளினால் அட்மிரலாக பதவியுயர்வு பெற்ற ட்ரவிஸ் சின்னையா அவர்களுக்கு தன்னுடைய வாழத்துக்களை தெரிவித்துள்ளனர். பாரம்பரியமாக கடற்படைத் தளபதியின் கடமைகளை வைஸ் அட்மிரல் சிரிமேவன் ரணசிஙக அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட பின் சம்பிரதாய முறைப்படி வாகன அணிவக்குப்பொன்றில் ஓய்வு பெரும் சின்னையா அவர்களை மற்ற அதிகாரிகளால் தலைமையகத்தின் நுழைவாயில் வரை அழைத்துச் செல்லப்பட்டு பிரியாவிடை அளிக்கப்பட்டனர். அவ்வேளையில் பாதையின் இரு மருங்கிலும் கடற்படை வீரர்கள் கூடி மரியாதை செலுத்தினர்.