சேவா வனிதா பிரிவு மூலம் திருகோணமலையில் உளவியல் திட்டமொன்ரை நடத்தப்பட்டன
கடற்படை சேவா வனிதா பிரிவின் தளைவி திருமதி திருனி சின்னய்யாவின் கருத்தின் மற்றும் தலைமளில் நேற்று (ஒக்டோபர் 12) உளவியல் விழிப்புணர்வை மேம்படுத்தும் திட்டமொன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் கலைக்கழத்திலுள்ள அட்மிரல் வசந்த கரன்னாகொட கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
குறித்த கடற்படை கட்டளையின் கடற்படை உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்காக நடைபெற்ற இந்த திட்டத்தில் கழந்துகொன்ட அனைத்தவர்களுக்கும் மதிப்புமிக்க சான்றிதழ் வழங்கப்பட்டது. இத் திட்டம் கடற்படை சேவா வனிதா பிரிவு, கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் கடற்படை மனநல ஆலோசனை பிரிவு கூட்டாக ஏற்பாடு செய்திருந்தது.
சிரிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை மனநோய்களுக்கான நிபுணர் மருந்துவ அதிகாரி ரசிக பெரெரா, பேராதனை பல்கலைக்கழகத்தில் மனநல துறையில் பிரதானி கலாநிதி தனேஷ் கருனாநாயக்க, மருந்துவ அதிகாரி திருமதி இந்து சமரசேகர, திருமதி சுஜானி தலுகம மற்றும் இலங்கை கடற்படையின் நிபுணர் மருந்துவ அதிகாரி கொமான்டர் திருமதி துஷானி ஹேனேகம உட்பட உளவியல் ஆலோசகர்கள் குறித்த உளவியல் விரிவுரைகளுக்காக கழந்துக்கொன்டனர்.
இன் நிகழ்வுகளுக்காக கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் நிமல் சரத்சேன அவர்கள், சேவா வனிதா பிரிவின் மூத்த உறுப்பினர்கள், கடற்படையின் மூத்த அதிகாரிகள், கடற்படை உறுப்பினர்கள் உட்பட அவர்களின் குடும்பத்தினரும் கழந்துக்கொன்டனர்.