காலி கலந்துரையாடல் 08 வது சர்வதேச கடல் மாநாடு பிரமாண்டமாக தொடங்கியது
 

பாதுகாப்பு அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இலங்கை கடற்படை முலம் தொடர்ந்து எட்டாவது முரயாக ஏற்பாடு செய்யப்பட்ட காலி கலந்துரையாடல் 2017 சர்வதேச கடல் மாநாடு இன்று (ஒக்டொபர் 09) கொழும்பு காலி முகத் ஹோட்டலில் தொடங்கியது. இந்தியா, சீனா, ஜப்பான், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்கா உட்பட 51 நாடுகளில் பிரதிநிதிகள் மற்றும் 12 சர்வதேச நிறுவனங்களிள் பிரதிநிதிகள் இந்த மாநாடுக்காக கலந்து இருக்கின்றனர்.

“கடல் பாதுகாப்பு விரிவாக்க மேலும் விரிவான கடல் பார்வை” என்ற தொனிப் பொருளில் நடைபெறும் இந்த ஆண்டு மாநாட்டின் பாரம்பரிய 19 விரிவுரைகள் சமர்ப்பிக்க உள்ளது. இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ட்ரவிஸ் சின்னய்யா அவர்கள் இதயங்கனிந்த வரவேற்பை நல்கினார். முதல் நாள் அமர்வில் தலைமை விருந்தினராக கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களால் இங்கு பிரதான விரிவுரை சமர்பிக்கப்பட்டது.

இந்த சர்வதெச மாநாட்டுக்காக இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அவர்கள் சிறப்பு அழைப்பு பெற்று கழந்துக்கொன்டாள். மெலும் பாதுகாப்பு அதிகாரிகளின் தலைமை பிரதானி அட்மிரல் ரவிந்திர விஜேகுனரத்ன, இராணுவ தளபதி லெப்டினென்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, விமானப்படை தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி, காவல்துறை மா அதிபர் பூஜித ஜயசுன்தர ஆகியொர் உட்பட தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் அரசாங்கத்தில் ஆயுதப்படைகளிள் உயர் அதிகாரிகள் ஆகியோரும் முதல் நாள் அமர்வில் பங்கேற்றனர்.

பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனையின் கீழ் 2010 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை முதல் தடவையாக சர்வதேச கடல்சார் மாநாடு காலியில் நடத்தியது. கடல் பாதுகாப்பு பற்றி விவாதிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு நம்பிக்கையாளர்களுக்கு ஒரு பொதுவான தளம் உருவாக்குதல் இந்த நிகழ்வின் முக்கிய நோக்கமாகும்.

கடந்த தசாப்தத்தில் இந்திய பெருங்கடல் முழுவதும் ஆயுத கடத்தல், கடற்கொள்ளை, மனித கடத்தல், கடல்வழி பயங்கரவாதம், மற்றும் போதைப் பொருள் கடத்தல் ஆகியவையான கடல் பாதுகாப்பை அச்சுறுத்தும் பல நடவடிக்கைகள் வளர்ந்து வருவது காணப்பட்டது. இது கடல் நடவடிக்கைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இலங்கை கடற்படை கடல்வழி பயங்கரவாதம் ஒழிப்பிற்தல் மற்றும் இந்திய பெருங்கடலில் கடல் நடவடிக்கைகளின் பாதுகாப்பு உறுதி செய்தலுக்காக தன்னுடைய கடமைகள் மேற்கொன்டுள்ளது.

அத்தகைய பின்னணியில் வளர்ந்து வரும் கடல்வழி பொதுவான சவால்கள் வெற்றிகரமாக எதிர்கொள்ள வலுவான பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் உலகளாவிய மூலோபாயத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இலங்கை கடற்படை ஆண்டுதோறும் குறித்த மாநாடு நடத்துகிறது.

2017 காலி கலந்துரையாடல் சர்வதேச கடல் மாநாடில் கடற்படை தளபதியவர்களின் வரவேற்பு பேச்சு