இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62வது தினத்தை முன்னிட்டு கடற்படையினரால் காரைநகர் தீவில் மருத்துவ சிகிச்சை முகாம்
காரைநகரில் அமைந்துள்ள இலங்கை கடற்படை கப்பல் எலார நிருவனத்தின் 62 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படையினரால் நேற்று (ஒக்டோபர் 05) காரைநகர் தீவில் பொதுமக்களுக்காக மருத்துவ சிகிச்சை முகாமொன்று நடைபெற்றது. குறித்த முகாம் காரைநகர் பிராந்திய மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இன் நிகழ்வுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நிருவனத்தின் ஊழியர்கள் தங்களுடைய பங்களிப்பை வழங்கியுள்ளனர். கடற்படையினரால் பொது மக்களின் நன்மை கருதி மேற்கொள்ளப்படுகின்ற பல சமூக நலத் திட்டங்களின் மற்றொமொரு சமூக நலத் திட்டமாக இத் திட்டம் கூறப்படுகின்றது. வட கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ஜயந்த த சில்வா அவருடைய வழிகாட்டுதலின் கீழ் குறித்த மருத்துவ சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.
கடற்படையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இச்சமூக சேவையினூடாக இத்தீவில் வசிக்கும் 383 மக்கள் தமது நோய்களுக்கான சிகிச்சையினை பெற்றுக்கொண்டனர். இன் நிகழ்வுக்காக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் திரு. டீ சத்தியமூர்த்தி மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் திரு கே நன்திகுமார் ஆகியோர் கழந்துகொன்டனர்.
மேலும், இம்மக்களிடையே காணப்பட்ட நாட்பட்ட தொற்றா நோய்கள், சிறுவர் சுகாதார பிரச்சினைகள், வாய்வழி / பல் நோய்கள், வயோதிப உடல்நலக் குறைபாடுகள் மற்றும் கடுமையான / நீண்டகால உடல்நல நோய்கள், அத்துடன் கர்ப்பகால பராமரிப்பு மற்றும் பெண்கள் சுகாதாரப் பராமரிப்பு ஆகியன அவதானிக்கப்பட்ட பின்னர் .ஆரம்ப கட்ட சுகாதார சிகிச்சைகள் வழங்கப்பட்டன. மேலும், அனைத்து சோதனைகள் மற்றும் கண் சோதனைகள் இலவசமாக கடற்படையினரால் வழங்கப்பட்டன.