சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது
கடற்படயினறுக்கு கிடைக்கப்பட்ட தகவல்கலின் படி கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் சட்டவிரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன.
அதன் பிரகாசமாக தென் கடற்படை கட்டளையின் தங்காலை, இலங்கை கடற்படை கப்பல் ருஹுன நிருவனத்தின் கடற்படை வீர்ர்கள் மற்றும் அம்பாந்தோட்டை பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவின் அதிகாரிகள் இனைந்து கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது விற்பனைக்கு தயாராகவுள்ள 110 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகளுடன் (Brand Top Mountain) இருவர் திக்வெல்ல பகுதியில் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக திக்வெல்ல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
கடற்படயினர் வழங்கிய புலனாய்வு தகவலின் படி, இலங்கை சுங்க அலுவலர்களால் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது சட்டவிரோதமான முரையில் 900 கிராம் தங்கம் உடலில் மறைத்து இந்தியாவுக்கு எடுத்துசெல்ல முயற்சி செய்த ஒருவரை கைது செய்யப்பட்டது. 45 வயதான இவர் மட்டக்குலி பகுதி சேர்ந்தவராவார்.
சட்டவிரோதமாக பிடித்து வைத்திருந்த 02 கடலாமைகளுடன் ஒருவரை கடந்த செப்டம்பர் 28 ஆம் திகதி யாழ்பானம், வேலனி பகுதியில் வைத்து வடக்கு கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்களால் கைது செய்யப்பட்டது. அங்கு அவருடைய படகு மற்றும் கடலாமைகள் ஊர்காவற்துறை கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தென் கடற்படை கட்டளையின் இணைக்கப்பட்ட கடற்படை வீர்ர்கள் மற்றும் அம்பாந்தோட்டை வனவிலங்குத் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் இனைந்து கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி மேற்கொன்டுள்ள சோதனை நடைவடிக்கையின் போது சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 13 சிங்கிறாலுடன் இருவர் மிரிஜ்ஜவில துறைமுகம் அருகில் வைத்து கைது செய்யப்பட்டன. குறித்த சிங்கிறால்கள் எடுத்து செல்ல உள்ள 02 மோட்டார் சைக்கிள்களும் கைது செய்யப்பட்டது. குறித்த சந்தேகநபர்கள், சிங்கிறாலுகள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக அம்பாந்தோட்டை கடற்றொழில் ஆராய்ச்சி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த காலப் பகுதி சிங்கிறால்கள் முட்டையிடும் காலம் என்பதால் இந்த காலத்தில் சிங்கிறால்கள் பிடிப்பது தடைசெய்யப்பட்டது.
வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்களால் கடந்த செப்டம்பர் 29 ஆம் திகதி சட்டவிரோதமான வலைகள் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 02 மீனவர்கள் கல்பிட்டி, கிபுல்பொக்க பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மீன் பிடிக்க பயன்படுத்திய ஒரு படகு, 2.5 மீட்டர் நீலமான ஒரு சட்டவிரோதமான வலை, பிடிக்கப்பட்ட 05 கிலோகிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளதாக குறிப்பிடத்தக்கது. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக புத்தலம் துனை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடலோர பாதுகாப்பு திணைக்களத்தின் இனைக்கபட்ட கடற்படையினரால் கடந்த செப்டம்பர் 30 ஆம் திகதி அம்பாரை ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தில் மேற்கொன்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடல் வெள்ளை குறிப்பு சுறா (Ocean White Tip Shark) ஒன்றை வைத்துருந்த 04 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் படகு உள்ளே இருந்து குறித்த சுறா கன்டுபிடிக்கப்பட்டது. குறித்த சந்தேக நபர்கள், படகு மற்றும் பொறுட்கள் ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பாலமுனை கடற்றொழில் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. குறித்த சுறா 1996 ஆம் ஆண்டு, மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்ட இனங்கள் என பெயரிடப்பட்டது.