இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகளின் மத்தியில் முதல் உத்தியோக கலந்துரையாடல் கொழும்பில்
 

இலங்கை கடற்படை மற்றும் பாகிஸ்தானிய கடற்படை பிரதிநிதிகள் மத்தியில் நடைபெற்ற முதல் உத்தியோக கலந்துரையாடல் நேற்று (செப்டம்பர் 18) கொழும்பு கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது.

கடற்படை பணிப்பாளர் நாயகம் நடவடிக்கைகள் ரியர் அட்மிரல் பியல் த சில்வாவின் தலைமயில் இலங்கை கடற்படை பிரதிநிதி குழுவுக்காக 10 அதிகாரிகளும் கொமடோர் மசூட் கூர்ஷிட் தலைமயில் பாக்கிஸ்தான் கடற்படை பிரதிநிதி குழுவுக்காக 04 அதிகாரிகளும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். முக்கியமாக இங்கு நடவடிக்கைகள், தொழில்நுட்ப திறமைகள் மற்றும் பயிற்சி பற்றி கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இது மூலம் இரு நாடுகளின் கடற்படையினரிடையே புரிந்துணர்வை மேம்படுத்துவதோடு செயல்பாட்டு திறனை மேம்படுத்துவதையும் மையப்படுத்தியுள்ளது. இன் நிகழ்வு நினைவு கூறும் வகையில் இவர்கள் இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாரிக் கொள்ளப்பட்டன. இந்த விவாதம் ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகள் இடையில் நடைபெறுவதாக குறிப்பிடத்தக்கது.