இம்மாதம் (செப்டம்பர்) 04ம் திகதி இந்து - லங்கா கடற்படை கூட்டுப்பயிற்சியில்(Sri Lanka India Naval Exercise - SLINEX 2017) கலந்து கொள்வதற்காக சென்ற இலங்கை கடற்படைக் கப்பல் சயுற மற்றும் சாகர ஆகிய இரண்டு கடற்படை கப்பல்களும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகின்ற கூட்டுப்பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவு செய்து அண்மையில் (செப்டம்பர், 17) நாடு திரும்பியுள்ளன.